Thursday, August 6, 2009

காதலாய்

இருக்குமோ ?


கடமையில்
கால்வைக்க
பயமோ?


எதிர்காலம்
பாலைவனமாக
இருப்பதாலோ ?


தன்னலமற்ற
வாழ்வில்
எப்போதும்
உயிர்
எரிந்துகொண்டு ?!


தியாகிகளின்
கடைசிகாலம்
வயிற்றுபோராட்டத்தில் ...


உண்மைகள்
விசும்பலோடு
ஓரமாக,
போலிகள்
வரவேர்க்கபடுவதால்தான் !!


பகத்சிங்க்,
போஅஸ், ஆசாத் ,
வரிசையில்
மெழுகுவர்த்தியும்...

பிறகு,
மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?!!

19-03-03

Note: This rejected verse was participated in college compition, it happend because EEE department politics involved. Beause jupiter was in "most wanted" list.


Sunday, March 8, 2009

Empty Heart


During The Moonrise,
in dusk; felling her,
Looking her footprints,
in the seashore,

Searching the root
of laugh, Which
reverberate in my ears;

Digging the
gravestone of time;
when she would have
Thought about me;

The endless
Searching; hearing;
Digging;

My Heart is
being buoyed up
infront of
my eyes;

Though pull in
with my Empty
Hands it,
Its very hard.



06-02-2004.
© jupiter கவிதைகள்

Tuesday, March 3, 2009

சமுதாயம் !!!


சமுதாயம்
இன்னும்
அரிதாரம்
பூசி
நடித்து கொண்டு தான்
இருக்கிறது...


இன்னும்
சமுதாயம்
நஞ்சை
குடித்துவிட்டு
மயங்கி கொண்டு தான்
இருக்கிறது ...


ஏழைகளை
கணக்கெடுக்க
வறுமை கொடு
போட பென்சில்
வாங்கிய கணக்கில்
வூழல் ...


வூழல் ,
அரசாங்கத்தின்
மைய புள்ளி ...


சாதி ,
விழமாக
இருந்தாலும்
குடித்து விட்டு
இரத்த தானம்
கேட்கிறது ...


இப்போது
மதம்
கடவுளாகிவிட்டது ...


காக்கிச்சட்டை
மந்திரிகளின்
அடிவருடிகளாக ...


ஒருபக்கம்
பணகுவியல்
மறுபக்கம்
பசிகுவியல் ...


கோவில்
வாசலில்
சில்லறைக்கு
வாய் பிளந்து
கிடக்கும்
தட்டுகளைதாண்டி,
நிரம்பி வழியும்
உண்டியல் ...


பாக்கெட்
இல்லாதவனுக்கு
கண்டிப்பாக
தண்டனையளிக்கும்
நீதிமன்றம் ...

இனியும்,

சமுதாயம்
அரிதாரத்தோடு....


25-07-2004
© jupiter கவிதைகள்

Wednesday, December 10, 2008

மறு உயிர்ப்பு...


கண்ணில்
ஓர்
மிரட்சி ...


முகம்
சற்று
கலைப்புடேன் ..


முடிகள்
கலைந்து
காற்றோடு
அங்கும் இங்கும் ...


தோல்
தளர்ச்சியுற்று
சுருக்கங்களுடன் ...


கோபம்
மூக்கின் நுனியில்
யார் மீது
பாயலாம்
என்ற ஆவேசத்தோடு ...


கிளர்ச்சியில்
அவ்வப்போது
எழுந்து பார்க்கும்
ரோமங்கள் ...


வலி
அலை
அலையாய்
உட்சத்தை
அடைய...


பீச்சிடும்
ரத்த நாளங்கள்
கண்களில் வழிய ...


நான்,
ஆண் என்பதை
மறந்து
அந்த பெண் அருகில்
சென்று சொன்னேன்,

வருந்தாதே!
இன்னும் சில நொடி
பொழுதுதான்
இருக்கிறது
உன் தாய்மைக்கு!!!.

15-10-2003.

© jupiter கவிதைகள்

Wednesday, November 19, 2008

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?


காதலாய்
இருக்குமோ ?


கடமையில்
கால்வைக்க
பயமோ?


எதிர்காலம்
பாலைவனமாக
இருப்பதாலோ ?


தன்னலமற்ற
வாழ்வில்
எப்போதும்
உயிர்
எரிந்துகொண்டு ?!
தியாகிகளின்
கடைசிகாலம்
வயிற்றுபோராட்டத்தில் ...


உண்மைகள்
விசும்பலோடு
ஓரமாக,
போலிகள்
வரவேர்க்கபடுவதால்தான் !!


பகத்சிங்க், போஅஸ், ஆசாத் ,
வரிசையில்
மெழுகுவர்த்தியும்

பிறகு,

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?!!

19-03-03
Note: This rejected verse was participated in college compition, it happend because EEE department politics involved. Beause jupiter was in "most wanted" list.

கடவுளா ?!




உயிரின் ஊற்றில்
உருவான உயிர்
சன்னதிக்கு போவதால்
வருகிறதா ??

எங்கோ
சுற்றிக் கொண்டிருக்கும்
கிரகணங்கள்
உன் நாடியை
நிர்ணயகிறதா ??

வருமானம்
இன்று எவ்வளவு
என்று தினருபவனே
ஜோசியம் சொல்வதா ???

நாளை என்பதை
நாளை,
நிர்ணயிக்கும்போது ...
இந்த ஜென்ம
பாவங்கள்
ரட்சிக்கப்பட்டு
அடுத்த ஜென்மத்தில்
சந்தோஷமாக
இருப்பீர்களா ???

கடவுள்
என்பதில்
மதம்
உள்வாங்கபடுகிறதா ?
மனிதம்
உள்வாங்கபடுகிறதா ???

இன்னொன்று ...

சிலையிலிருந்து
சிதறிய சாமிகள்
இன்னும்
கடவுளாக்கப்படவில்லை
என்பது தான்...

04-03-2003.
© jupiter கவிதைகள்

Monday, October 6, 2008

life is beautiful


Life is Joy.

Life is full of laugh.

Life is full of Love.

Life is full of Care.

Life is infinite joy, Life is eternity of care and love. If We pursue all the time- joy, love, care, acceptance. We can see the image when turn back through out of life is "Beautiful".