Sunday, September 28, 2008

இரவு பாடி பறவை



அழுத்தமான
இரவு

சலசல வென்று
ஓடையில்
தண்ணீர்

சுத்தமான
நிலா ஒளி

இரவு பாடி
பறவையின்
குரல்

அந்த
குரலில்
இனம் காணாத
சோகம் ,
தனிமையின்
பாரம் ,
கனத்த
பிரிவு!

கருவேலமரம்
இழையும்
ஓசை...

புள்ளி
புள்ளி
நட்சத்திரங்கள்....

வரப்பு ஒர
பனிபுல்
என்
வெற்றுபாதம்
நனைத்தது...

அனைத்தும்
சில்லென்ற
காற்றில்
மிதந்து
வந்தது ...

இரண்டு
கைகளையும் விரித்து
முகம் நிமிர்த்தி
கண்கள் மூடி
முகர்ந்தேன்...

என் உயிர்
மிதநதது,
கரைந்தது
காற்றோடு...

ஆனால்,
இரவு பாடி
பறவையின்
குரல்
கேட்டுகொண்டே இருந்தது ...

10-09-2003

© jupiter கவிதைகள்

first gear.

This is jupiter first words that he is happy to publish his thoughts in the e-world. he has been thinking to write about something in the blogs, but he doesnt get any chance to make it. from now it will.

© JupiterGuru