Wednesday, November 19, 2008

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?


காதலாய்
இருக்குமோ ?


கடமையில்
கால்வைக்க
பயமோ?


எதிர்காலம்
பாலைவனமாக
இருப்பதாலோ ?


தன்னலமற்ற
வாழ்வில்
எப்போதும்
உயிர்
எரிந்துகொண்டு ?!
தியாகிகளின்
கடைசிகாலம்
வயிற்றுபோராட்டத்தில் ...


உண்மைகள்
விசும்பலோடு
ஓரமாக,
போலிகள்
வரவேர்க்கபடுவதால்தான் !!


பகத்சிங்க், போஅஸ், ஆசாத் ,
வரிசையில்
மெழுகுவர்த்தியும்

பிறகு,

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?!!

19-03-03
Note: This rejected verse was participated in college compition, it happend because EEE department politics involved. Beause jupiter was in "most wanted" list.

கடவுளா ?!




உயிரின் ஊற்றில்
உருவான உயிர்
சன்னதிக்கு போவதால்
வருகிறதா ??

எங்கோ
சுற்றிக் கொண்டிருக்கும்
கிரகணங்கள்
உன் நாடியை
நிர்ணயகிறதா ??

வருமானம்
இன்று எவ்வளவு
என்று தினருபவனே
ஜோசியம் சொல்வதா ???

நாளை என்பதை
நாளை,
நிர்ணயிக்கும்போது ...
இந்த ஜென்ம
பாவங்கள்
ரட்சிக்கப்பட்டு
அடுத்த ஜென்மத்தில்
சந்தோஷமாக
இருப்பீர்களா ???

கடவுள்
என்பதில்
மதம்
உள்வாங்கபடுகிறதா ?
மனிதம்
உள்வாங்கபடுகிறதா ???

இன்னொன்று ...

சிலையிலிருந்து
சிதறிய சாமிகள்
இன்னும்
கடவுளாக்கப்படவில்லை
என்பது தான்...

04-03-2003.
© jupiter கவிதைகள்