Sunday, October 5, 2008

ரணம்

எங்கோ
மேலே பறந்து
மேகதினுடே
சென்று நட்சத்திரம்
பறித்து
வருகிறேன் ...

அவள்
மின்னல்
பார்வை
என் மீது
பாய்வதற்கு,
முன்னால்
நடந்து பார்கிறேன் ...

அவள்உடன்
பேசுகையில்
ஒளி வேகத்தில்
நொடி முட்கள்,
அவளை சுழன்று வரும்...

எதிர்நோக்கும் போது
ஒலி வேகத்தில்
நொடி முட்கள்,
என்னை சுழன்று வரும்...

ஒரு நொடி பொழுதும்
மறக்க
நினைத்து ,
நினைக்கிறேன் ...

அவள்
வழித்தடம்
மட்டும்
லாவகமாய்
மறைக்க
பார்க்கிறேன் ...

புரட்சிக்கு
முழுக்கு
போட்டுவிட்டு
பூவுடன் புன்னைகைக்கிறேஅன் !...

தனியாய்
அவள்
நினைவுகளை
சிந்தித்து
சிந்தித்து
பித்தனாய்
சிரிக்கிறேன் ...

அவள்
மௌன
சிரிப்புக்காய்
எதிரே
மிதந்து
தவிக்கிறேன்!!

என் அருகில்
அவள்
நெருங்கும்போது
என்
இதயம்
சின்னாபின்னமாகி
உதிரம்
என் கண்கள்
வழி சொட்டுவது
கேட்குமா
அவளுக்கு ??!!


08-01-2004
© jupiter கவிதைகள்

No comments: